Maravalli Kizhangu Murukku:மரவள்ளிக்கிழங்கில் முறுக்கு; எப்படி செய்வது?இதோ ரெசிபி!
தீபாவளி பலகாராம் செய்யும்போது ஆரோக்கியமாகவும் செய்ய வேண்டும் என்று திட்டம் இருக்கா. இதோ மரவள்ளி கிழங்கு முறுக்கு. எப்படி செய்வது என்று காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையானவை: மரவள்ளிக் கிழங்கு மாவு - 1 கப், அரிசி மாவு, கடலைமாவு - தலா 1 கப், மிளகாய்த் தூள் - ½ டீஸ்பூன், பெருங்காயத் தூள் - 4 டீஸ்பூன், எள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளைப் போட்டு, எள், மிளகாய் தூள் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத் தூளை சிறிது தண்ணீரில் கரைத்து மாவுக்கலவையில் ஊற்றி முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். எள்ளுக்கு பதில் ஓமம் சேர்க்கலாம்.
மரவள்ளிக்கிழங்கு மாவு கிடைக்கவில்லை என்றால் மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து முறுக்கு மாவுப் பதத்தில் கெட்டியாக அரைக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -