Indian Spice Cake: ராவை மட்டும் இருந்தா போதும்; சுவையான கேக் ரசிபி இதோ!
கொழுப்பு நிறைந்த பால், சர்க்கரை, மைதா, ரவை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சோம்பு, ஏலக்காய் தூள், பட்டை தூள், பாதாம் ஆகியவை இருந்தால் மட்டுமே போதும். எளிதாக தயாரித்துவிடலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாத்திரத்தில் கொதிக்கவைத்த பாலை ஊற்றவும். இதில் சர்க்கரை போட்டு கரைக்கவும். அடுத்து இதில் உருக்கிய நெய் சேர்த்து கலக்கவும். பால் கலவையை ஆறவிடவும்.
மற்றோரு பாத்திரத்தில், மைதா, ரவை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சோம்பு, ஏலக்காய் தூள், பட்டை தூள், சேர்த்து கலக்கவும்.
இதில் பால் கலவையை ஊற்றவும். கட்டி இன்றி நன்கு கலக்கவும் கேக் டின்'னை கிரீஸ் செய்து, கேக் கலவையை ஊற்றவும்.
இதன் மேல் பாதாம் துண்டுகளை தூவவும். oven'னை 160°C அளவிற்கு, 15 நிமிடம் சூடாக்கவும் கேக் டின்'னை oven'னில் வைத்து 1 மணி நேரம் 160°C அளவிற்கு, பேக் செய்யவும். இந்தியன் ஸ்பைஸ் கேக் தயார். இதை குக்கரிலும் தயாரிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -