Urulaikilangu Potalam: சுவையான மதுரை ஸ்பெஷல் உருளைக்கிழங்கு பொட்டலம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 3/4 கிலோ , நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி, சோம்பு - 1 1/2 தேக்கரண்டி, பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது , இஞ்சி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, வெங்காயம் - 2 நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை , கடலை மாவு - 2 1/2 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து லேசாக வறுக்கவும். அதன் பின் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்.
அதன்பிறகு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறிவிடவும். அடுத்தது கறிவேப்பிலை, கடலைமாவு அடுத்தடுத்து சேர்த்து கிளறவும்.
அடுத்தது மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து மசாலா உருளைக்கிழங்கு உடன் சேர்த்து கிளறிவிடவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு ஸ்பெஷல் பொட்டலம் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -