Potato Bread Cutlet: சுவையான பிரட் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள், உருளைக்கிழங்கு - 3 வேகவைத்தது, கேரட் - 1 துருவியது, பச்சை பட்டாணி - 1/2 கப் வேகவைத்தது, கொத்தமல்லி இலை நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை:ஒரு பெரிய பாத்திரத்தில், வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், வேகவைத்த பச்சை பட்டாணி மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
அடுத்தது உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், மஞ்சள் தூள்,மிளகு தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, கலந்து விட்டு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது பிரட் துண்டுகளை வட்டமாக வெட்டிக்கொள்ளவும். அதன் பின் உருளைக்கிழங்கு மசாலாவை இரண்டு பிரட் துண்டுகள் நடுவில் வைக்கவும்.
அடுத்தது தவாவில் நெய் ஊற்றி சூடானதும், கட்லெட்டுகளை வைத்து மிதமான தீயில் ரோஸ்ட் செய்யவும்.
கட்லெட் பாதி வெந்ததும் அதன் மீது சிறிதளவு நெய் தடவி இருபுறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்தால் சுவையான பிரட் உருளைக்கிழங்கு மசாலா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -