Lemon Coriander Soup: சளி, இருமல் சரியாகணுமா? எலுமிச்சை - கொத்தமல்லி சூப் ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்: எண்ணெய் - 2 தேக்கரண்டி, பூண்டு நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, வெங்காயத்தாள் வெங்காயம், கேரட் - 1/2 கப் நறுக்கியது, முட்டைகோஸ் - 1/2 கப் துருவியது , பீன்ஸ் - 1/2 கப் நறுக்கியது , குடைமிளகாய் - 1/2 கப் நறுக்கியது , உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, தண்ணீர் - 1 லிட்டர் , எலுமிச்சைப்பழம் - 2 , கொத்தமல்லி இலை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
அடுத்தது வெங்காயத்தாள், வெங்காயம், கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
அடுத்தது உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறிவிட்டு, தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
அடுத்தது எலுமிச்சைச்சாறு ஊற்றி பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்
மிளகு சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான எலுமிச்சை கொத்தமல்லி சூப் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -