Instant Paneer Tikka: சுவையான, ஹெல்தியான பனீர் டிக்கா செய்வது எப்படி? இதோ!
image 1
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபனீர் புரதச்சத்து நிறைந்தது. இறைச்சி வகைகள் சாப்பிடாதவர்கள் பனீர் டயட்டில் சேர்க்கலாம். வீட்டிலேயே பனீர் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்: பனீர் - 250கிராம், பூண்டு - 2-3, உப்பு - தேவையான அளவு, மிளகாய் தூள் - 1/4 டீ ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப பயன்படுத்தவும்), மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, சீரக தூள் - 1/4 டீஸ்பூன், என்ணெய் -தேவையான அளவு
பனீர் சிறிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டு தேவையெனில் இஞ்சி சேர்த்து இரண்டையும் விழுதாக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் பொடி, சீரக தூள், மஞ்சள் தூள் சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலக்கவும். இப்போது இந்த கலவையில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும். பனீர் உடையாக இருக்க வேண்டும். இதை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இப்போது, அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். இப்போது மசாலா கலவை செய்து வைத்துள்ள பனீர் துண்டுகளை சேர்க்கவும். பனீர் பொன்னிறமானதும் எடுத்தால் பனீர் டிக்கா தயார். வீட்டீல் பனீர் தயாரிக்க தயிர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து தயாரிக்கலாம். எளிதான செயல்முறைதான்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -