Kadha: மழைக்காலத்திற்கு ஏற்ற மூலிகை ட்ரிங்; ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் கதா ரெசிபி இதோ!
மழை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்கள், சளி ஜலதோஷம் ஆகியவற்றை தவிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் கதா ட்ரிங்க் சாப்பிடலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமிளகு, இஞ்சி, பட்டை, வாள் மிளகு ஆகியவற்றை சிறிதளவு எடுத்து அதை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்பளர் தண்ணீர் அரை டம்ளராக ஆகும்வரை கொதிக்கவிட்டு வடிக்கட்டி தேன் சேர்த்து அருந்தலாம்.
கதா தண்ணீர் தயாரிக்க தேவையான பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து அதை பொடியாக செய்து வைக்கலாம். காற்று புகாத டப்பாவில் வைத்தால் 2 மாதங்களுக்கு இருக்கும். அதை தேவையானபோது மூலிகை தேநீராக செய்து குடிக்கலாம்.
வாரத்திற்கு இரண்டு முறை இதை குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகக்க செய்யும். தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவும்.
இதோடு, தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். சர்க்கரை சேர்ப்பது நல்லது அல்ல. இது குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -