Dry Fruits Halwa : உலர் பழங்களில் சத்தான அல்வா.. இதை எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்: பேரிச்சம்பழம் - 1 கப், பாதாம் - 1/4 கப், வால்நட் - 1/4 கப், முந்திரி - 1/4 கப், பிஸ்தா - 1/4 கப், உலர் திராட்சை - 1 மேசைக்கரண்டி, சாரப்பருப்பு - 1 தேக்கரண்டி, முலாம்பழ விதைகள் - 2 தேக்கரண்டி, நெய், ஏலக்காய் தூள், சர்க்கரை - 1/2 கப், தண்ணீர் - 1/2 கப்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் கொட்டை எடுத்த பேரீச்சம்பழத்தை சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து பாகாக மாறும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். அடுத்தது ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
நெய் காய்ந்ததும் அதில் பாதாம், வால்நட்ஸ், முந்திரி மற்றும் பிஸ்தா சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் நெய் சேர்த்து அதில் உலர் திராட்சை, சாரப்பருப்பு, முலாம்பழ விதைகள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஊறவைத்த பேரிச்சம் பழத்தையும், வறுத்த பருப்புகளையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவும். அடுத்து கடாயில் நெய் சேர்த்து அரைத்த பேரிச்சம்பழம், சர்க்கரை பாகு, அரைத்த பருப்புகளையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து ஹல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும். ஒரு பாத்திரத்தில் நெய் தடவி ஹல்வாவை இறக்கி அதன் மேல் வறுத்த பருப்புகளை தூவி பரிமாறலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -