Diwali 2024:ஆரோக்கியமான கருப்புகவுனி அரிசி முறுக்கு..செய்வது எப்படி?

தீபவாளி சமையத்தில் ஆரோக்கியமான ஏதாவது செய்ய வேண்டும் என்றால் கருப்புகவுனி அரிசி வைத்து முறுக்கு எப்படி செய்வது எனக் காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
தேவையான பொருட்கள் கருப்புகவுனி அரிசி - 1 கிலோ பொட்டு கடலை - 1/2 கிலோ தேங்காய்ப் பால் -100மி.லி. மிளகாய்த்தூள் - 30 கிராம் ஓமம் - 4 டேபிள் ஸ்பூன் எள் - 5 டேபிள் ஸ்பூன் நெய் -50 மி.லி . உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1லி.

கருப்புகவுனி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து பொட்டு கடலை சேர்த்து நைசாக அரைத் துக் கொள்ளவும்.
ஓமம், எள், உப்பு நெய், மிளகாய்த்தூள் மற்றும் தேங் காய்ப் பால் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு சுடும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிறகு வாணலி அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்கு பிழியும் குழாயில் மாவை போட்டு ஒவ்வொரு முறுக்காக பிழிந்து எடுக்கவும். சுவையான கருப்புகவுனி அரிசி தேங்காய்ப் பால் முறுக்கு தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -