Weight Gain Tips : ஆரோக்கியமாக உடல் எடையை கூட்ட இந்த உணவுகள் டயட்டில் கட்டாயம் இருக்கணும்!
ஒரு பக்கம் உடல் எடையை குறைக்க சிலர் கஷ்டப்பட, மறுபக்கம் மெலிந்த உடலை கூட்ட சிலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் உடல் எடை கூடாது. அப்படிப்பட்டவர்கள், எது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
உடல் எடையை அதிகரிக்க தினமும் பால் குடிக்கலாம். பால் பிடிக்கவில்லை என்றால் மில்க் ஷேக், லஸ்ஸி குடிக்கலாம்.
அத்துடன் செவ்வாழை, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி உள்ளிட்ட பழங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்.
தினமும் கொஞ்சம் வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடலாம். அது பிடிக்கவில்லை, கிடைக்கவில்லை என்றால் பீனட் பட்டர் எடுத்துக்கொள்ளலாம்
முன்குறிப்பிட்ட உணவுகளை காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். உடல் எடையை கூட்ட இது மட்டும் போதாது.
அன்றாட சாப்பிட வேண்டிய மூன்று வேலை உணவுகளையும் தேர்வு செய்து சாப்பிட வேண்டும். உடல் எடையை கூட்ட வேண்டும் என்பதற்காக தேவையற்றதை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட கூடாது