Curd Sandwich : தயிரில் சான்விச்.. சத்தான இந்த சிற்றுண்டியை குழந்தைகளுக்கு செய்து கொடுங்க!
தேவையான பொருட்கள் : தயிர் - 400 கிராம், பிரட் - 2 துண்டுகள், குடைமிளகாய் - 1 கப் நறுக்கியது , கேரட் -1 கப் துருவியது, பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, கொத்தமல்லி இலைகள் நறுக்கியது , தனி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி , உப்பு - 1/2 தேக்கரண்டி , சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, வெண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் ஒரு மெல்லிய துணியில் தயிரை புழிந்து பால்கோவா பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் .
அடுத்தது வடிகட்டிய தயிருடன் பொடியாக நறுக்கிய குடை மிளகாய், கேரட் , பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்.
கொத்தமல்லி இலைகள், தனி மிளகாய் தூள், உப்பு, சாட் மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது ஒரு தோசை கல்லில் வெண்ணையை தடவி சூடானதும் இரண்டு பிரட் துண்டுகளை இரு புறமும் டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது டோஸ்ட் செய்த பிரெட்டில் தயிர் கலவையை தடவ வேண்டும்.
அதன்பின் மற்றொரு பிரட் துண்டை அதன் மேல் மூடி முக்கோண வடிவில் வெட்டி எடுத்ததால் சுவையான தயிர் சான்விச் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -