Creamy Mushroom Toastie: மாலை நேர உணவு - க்ரீமி காளான் டோஸ்ட் ரெசிபி இதோ!
என்னென்ன தேவை? பிரெட் - தேவையான அளவு காளான் - ஒரு கப் ப்ரெஷ் க்ரீம் - ஒரு கப் (250 கிராம்) வெண்ணெய் - தேவையான அளவு வெங்காயம் - 1 சோயா சாஸ், Schezwan sauce - 1 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன் மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் - ஒரு ஸ்பூன் தண்ணீர்- சிறிதளவு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் வெண்ணெய் சிறிதளவு ஊற்றி அதில் நறுக்கிய காளானை சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். கிரெவி தயார் செய்ய வேண்டும். அதற்கு கடாயில் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும். இதோடு சோயா சாஸ்,Schezwan சாஸ் சேர்த்து வதக்க வேண்டும். இதோடு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்க வேண்டும். உப்பும் சேர்த்து அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்க வேண்டும்.இது நன்றாக கொதித்ததும், காளான் சேர்த்து 3 நிமிடங்களுக்குப் பின் அடுப்பிலிருந்து இறக்கவும். ஸ்டஃபிங்க் ரெடி.
அடுத்து பிரெட்களை வெண்ணெயில் டோஸ்ட் செய்து எடுத்துகொள்ளவும். இப்போது சூடான பிரெட் மீது வதக்கிய காளான் வைத்து கொத்தமல்லி தூவினால் க்ரீமி பனீர் டோஸ்ட் ரெடி.
பிரெட் வைத்து ஏராளமான உணவுகளை செய்யலாம். ஃப்ரெஞ்ச் டோஸ்ட், ப்ரெட் ஆம்லெட் உள்ளிட்டவைகளையும் செய்து கொடுக்கலாம்.
இருப்பினும், அடிக்கடி பிரெட் சாப்பிட வேண்டாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாலை நேர உணவாக கூட பிரெட் பயன்படுத்தி ஏதாவது குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -