Cooking Tips : மட்டன் சீக்கிரமாக வேக என்ன செய்யலாம்?
ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும் போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமட்டன் குழம்பு செய்யும் போது தேங்காய் சிரட்டை சேர்த்து வேகவைத்தால், ஆட்டுக்கறி சீக்கிரம் வெந்துவிடும்.
பீன்ஸ், முட்டைக்கோஸ், கூட்டு செய்யும் போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.
குலாப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால் பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை சேர்த்து கொண்டால் சுவை அற்புதமாக இருக்கும்.
பாசிப் பயறு, கொண்டைக் கடலை சுண்டல் செய்யும்போது தேங்காய், இஞ்சி துருவி சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
புளிசாதம், எலுமிச்சைச் சாதம் செய்யும் போது நிலக்கடலை வறுத்து சேர்க்காமல், எண்ணெயில் பொரித்து சேர்த்தால் மொறு மொறுவென இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -