Chirstmas Cake Recipe : கிறிஸ்துமஸ் கேக் சாப்பிடணும் போல இருக்கா? இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : பேரீட்சைப்பழம் - 1/2 கப் விதை நீக்கியது , காய்ந்த திராட்சை, டூட்டி ப்ரூட்டி, செர்ரி, வால்நட் - 1 1/2 கப், மைதா - 1 கப், பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி, பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி, நாட்டு சர்க்கரை - 3/4 கப், உருக்கிய வெண்ணெய் - 1/2 கப், பால் - 1 கப் காய்ச்சி ஆறவைத்தது , வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, பட்டை தூள் - 1 தேக்கரண்டி, ஜாதிக்காய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை சலித்து எடுத்து கொள்ளவும்.
சலித்த மாவில் நாட்டு சர்க்கரை, காய்ந்த திராட்சை, டூட்டி ப்ரூட்டி, செர்ரி, விதை நீக்கிய பேரீட்சைப்பழம், நறுக்கிய வால்நட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுத்தது, பால், வெண்ணிலா எசன்ஸ், வெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும், அதன் பிறகு பட்டை , ஜாதிக்காய் தூவி கலந்து கொள்ளவும்.
ஓவனில் 180 டிகிரி வைத்து 15 நிமிடம் சூடு செய்யவும். அதன் பிறகு, கேக் செய்வதற்கான டிரேவில் வெண்ணெய் தடவி கொள்ளவும்.
வெண்ணெய் தடவிய டிரேயில் சூடான கேக் கலவையை ஊற்றி, ஓவனில் 180 டிகிரியில் 40 நிமிடம் பேக் செய்யவும். 40 நிமிடத்திற்கு பிறகு கேக்கை பீஸ் போட்டு சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -