Orange Ice Cream:ஹெல்தியான ஆரஞ்சுப் பழ ஐஸ்க்ரீம் வீட்டிலேயே செய்யலாம் - ரெசிபி!
ஒரு முழு ஆரஞ்சை எடுத்து அதன் மேல் பகுதியை மட்டும் கேப் போன்று வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சதை பகுதியை மட்டும் ஸ்பூன் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்த்து 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கடாயின் ஓரங்களில் பிடிக்கும் ஏடுகளை கரண்டியால் எடுத்து பாலிலேயே மீண்டும் சேர்த்து விட வேண்டும். க்ரீம் பதம் வந்ததும் இதனுடன் பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு சிறிது, அரை ஸ்பூன் பாலாடை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்
ஆரஞ்சின் சதை பகுதியில் இருந்து விதைகளை நீக்கி விட்டு, அதன் ஜூசை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த ஜூசை நாம் க்ரீம் போல் தயாரித்து வைத்துள்ள பாலில் சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு,
நாம் வெட்டி எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு தோலின் மேல் பகுதியை கொண்டு இதை மூடிக் கொள்ள வேண்டும். இதை இரண்டரை மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து பின்பு வெளியே எடுத்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -