Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Banana Sweet Recipe:வாழைப்பழம் இருக்கா? எளிதான இனிப்பு ரெசிபி- செய்து அசத்துங்க!
வாழைப்பழம் பொட்டாசியம் நிறைந்தது. ஊட்டச்சத்து மிகுந்தது. தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவாழப்பழ பிரெட் டோஸ்ட், வாழைப்பழ மில்க்ஷேக், வாழைப்பழ பனியாரம், வாழைப்பழ போண்டா உள்ளிட்டவற்றை செய்து கொடுக்கலாம்.
வாழைப்பழம் இனிப்பு செய்யும்போது சர்க்கரை செய்ய வேண்டாம்.
தேவையான பொருட்கள்: கனிந்த வாழைப்பழம் -5, தேன் -5 தேக்கரண்டி,எலுமிச்சைச் சாறு -2 தேக்கரண்டி ,முந்திரிப்பருப்பு தூள் - சிறிதளவு..வாழைப்பழத்தை தோல் உரித்து, பழம் சிதையாமல் நீளவாக்கில் 2 துண்டாக நறுக்கிக்கொள்ளவும். தேனையும், எலுமிச்சைச் சாறையும் நன்றாகக் கலக்கவும்.
அந்தக் கலவையை வாழைப்பழத் துண்டுகளின் மேல் கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். பிறகு, வாழைப்பழத்துண்டுகளை வாணலியில் அடுக்கி, அடுப்பில் வைக்கவும்.சில நிமிடம் வேகவைத்தபின் வாணலியை இறக்கிவிடவும்.வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, முந்திரித் தூளை தூவி பரிமாறலாம். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். செய்து அசத்துங்க!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -