Avocado Roti:ஆரோக்கியம் நிறைந்த அவகடோ-பனீர் ரொட்டி ரெசிபி இதோ!
முதலில் பனீர்,தோல் நீக்கிய அவகடோ உடன் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துகொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோதுமை மாவில் அரைத்த அவகடோ விழுது, உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். பால், நெய் சேர்க்கலாம்.
தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி செயவ்தற்காக உருட்டி, மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் அவகடோ ரொட்டியை போட்டு இரு புறமும் பொன்னிறமாகும் வரை வேக விடவும். இதை எண்ணெய் சேர்க்காமலும் செய்யலாம்.
இதோடு, தயிர், புதினா சட்னி, தக்காளி தொக்கு உள்ளிட்டவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும்.
ஊட்டச்சத்து மிகுந்த அவகடோ ப்ரியரா? இதோ, பனீர், அவகடோ வைத்து சப்பாத்தி செய்து லன்ச், இரவு உணவு என எளிதாக செய்து முடித்துவிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -