Fluffy Pan Cake: ‘வாவ்’ சொல்ல வைக்கும் பஞ்சு போன்ற மென்மையான பான் கேக் ரெடி! ரெசிபி இதோ!
பான் கேக் சீராக வருவதற்கு அதில் பால் மற்றும் வினிகரை பயன்படுத்த வேண்டாம். இது சீரான தன்மையை தராது. மேலும் எதிர்பார்க்கும் சுவையும் மாறி இருக்கும்.
பாலுக்கு பதில் மோர் சேர்த்து கொள்ளலாம். மோர் ப்ரோபையோட்டிக் நிறைந்த உணவு, குடலுக்கு நனமை செய்யும். உடலின் நல்ல பாக்டீரியா வளர்வதற்கு இது உதவியாக இருக்கும்
பாலில் இருக்கும் புரதமானது கேக்கை கடினமாக்கும். அதனால் பால் வேண்டாம்
பாத்திரத்தில் கவனம் செலுத்துங்கள் - அதாவது பாத்திரத்தின் அடிப்பாகம் முக்கியம். நீங்கள் கலந்து வாய்த்த கலவையை வெறும் பாத்திரத்தில் ஊற்றினால் கேக் சரியாக வராது. அதற்கு முன் முட்டை அல்லது எண்ணெய் அந்த பாத்திரத்தின் அடி பாகத்தில் தடவி கொள்ளவும். இது கேக் பாத்திரத்தில் அடியில் ஒட்டாமல் சீராக வருவதற்கு உதவியாக இருக்கும்.
முட்டையில் இருக்கும் மஞ்சள் மற்றும் வெள்ளை கரு இரண்டையும் ஒன்றாக கலக்காதீர்கள் இது முட்டையை கடினமாக்கும். இவை இரண்டையும் பிரிப்பது மிகவும் சவாலாக இருக்கும். ஆனால் ஒரு கிண்ணத்தில் இரண்டையும் தனித்தனியாக வைத்து கேக் கலவை கலக்கும் போது , முதலில் மஞ்சள் ஊற்றி கலந்து கொள்ளவும். பிறகு வெள்ளை ஊற்றி கலந்து கொள்ளவும்.இது முட்டை மென்மையாக , பஞ்சு போன்று இருப்பதற்கு உதவும்.
என்ன செய்ய கூடாது என தெரிந்து கொண்டோம். இந்த மாற்றங்களுடன் பான் கேக் செய்முறை தெரிந்து கொள்வோம்.