Masala Tea: மணிக்கு ஒருமுறை மசாலா டீ குடிக்கிறீங்களா? நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!
குளிர்காலத்தில் மசாலா தேநீர் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதிகப்படியாக இதை உட்கொண்டால் மோசமான ஆரோக்கிய விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என சொல்லப்படுகிறது.
முழு மசாலா பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. செரிமான பிரச்சனைகளைத் தடுக்க அவற்றை மிதமாகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
மசாலா டீயில் குறிப்பிடத்தக்க அளவு காஃபின் உள்ளது. இதை அதிகப்படியாக எடுத்துக் கொள்வது அனைவருக்கும் பொருந்தாது. மன அழுத்தம் அல்லது பதற்றத்திற்கு ஆளாகும் நபர்கள் காஃபின் உட்கொள்வதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது.
சிலருக்கு குறிப்பிட்ட மசாலாப் பொருட்களை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மசாலா டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மசாலா தேநீரில் உள்ள மசாலா பொருட்களின் செழுமை, இரத்த அழுத்த அளவை அதிகரிக்க வழி வகுக்கும் என சொல்லப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக அளவில் மசாலா டீ எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏராளமான மசாலாப் பொருட்கள் சில நேரங்களில் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். இந்த அசௌகரியத்தைத் தடுக்க மசாலா டீ குடிப்பதை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது.