Coffee : காபிக்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் தொடர்பு இருக்கா? நிபுணர்கள் சொல்வதென்ன?
அடிக்கடி காபி குடித்தால் பித்தம் வரும், காபி குடித்தால் தலை நரைக்கும், உடல் எடை கூடும் என பல்வேறு பக்க விளைவுகளும் அடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. காபியில் இருக்கும் கஃபைன் எனும் வேதிப்பொருள் பின்னால் ஆயிரமாயிரம் விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
உண்மையில் காபி குடித்தால் உடல் எடை கூடுமா? வாருங்கள் பார்ப்போம். உண்மையில் காபி குடிப்பதால் எடை கூடாது ஆனால் காபியை பதப்படுத்தி அதிக இனிப்புடன் ஒரு Complex ட்ரிங்காக அருந்தும்போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம்.
ஆனால் நீங்கள் இரவில் ஒரு கப் ஜாவா காபி குடித்தால் அது தவறுதான் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள். ஃப்ராபுசினோஸ், லட்டேஸ், விப்ட் க்ரீம் ஆகியனவற்றை அருந்தினாலும் இதே விளைவுதானாம். பட்டியல் இன்னும் இருக்கிறது கேண்டி கேன்ஸ், பெப்பர்மின்ட் மோச்சா, பம்ப்கின் சிரப்ஸ் ஆகியனவும் உங்கள் உடல் எடையை அதிகரிக்குமாம்.
ஹை கேலரி ஸ்வீட், ஃபேட்டி காபி ஆகியன ஆரோக்கியமான உணவிற்கு ஈடாகவே ஆகாது. இவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
மேலும் இது போன்ற பானங்களை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்படும்.
ஆனால் நாம் முன்னோர்கள் சொன்னது போல் அளவுக்கு மிஞ்சினால் தான் நஞ்சு. ஏதோ ஒரு நாள் அத்தி பூத்தது போல் நீங்கள் உங்கள் காபியில் க்ரீம் சேர்த்து அருந்தினால் அதனால் எந்த ஆபத்தும் இல்லை. அதுவே அடிக்கடி அருந்த ஆரம்பித்தால் உடல் எடை கூடுவது நிச்சயம்.