Summer Tips:வியர்வை துர்நாற்றம் வீச என்ன காரணம் தெரியுமா?
வெயில் காலம் வந்தாலே அனைவரும் கவலைப்படும் ஒரே விஷயம் வியர்வை. சிலருக்கு கட்டு படுத்த முடியாத அளவிற்கு வியர்வை வெளியேறும். வியர்வை துர்நாற்றத்தை உண்டாக்குவது ஏன்..? அதை தடுக்க என்ன வழிகள் உள்ளதை பார்க்கலாம்
வியர்வை முடி வளர்ச்சி உள்ள இடங்களில் மட்டும் சுரக்கும்.அதாவது அக்குள், தலை , முடி வளரக் கூடிய இடங்களில் வியர்வை சுரக்கும். முடி வளரும் இடங்களில் பாக்டீரியாக்கள் இருப்பதால் அவை சத்துகளை அழித்து துர்நாற்றம் வீசும் கெமிக்கல்களாக மாறுகின்றன
வியர்வை வெளியேறாமல் தடுக்க தினமும் நார் தேய்த்து குளிக்க வேண்டும். அதோடு சோப்பு அல்லது பாடி வாஷ் போன்றவற்றை படையன்படுத்துவது அவசியம். அவை பாக்டீரியா பரவலை தடுக்கும்.
குளித்தவுடன் அரைகுறையாக துவட்டி விட்டு ஆடைகளை அணியாமல் உடலில் ஈரப்பதம் காய்ந்த பின் ஆடைகளை அணியாவும்.
வியர்வை ஆடையின் மேல் வெளியேறாமல் தடுக்க பருத்தி ஆடைகளையும் , லூசாக இருக்கும் ஆடைகளை பயன்படுத்தவும்.
வியர்வைக் கிருமிகள் சருமத்தை பாதிக்காமல் தடுக்க ஆண்டிபாக்டீரியல் சோப், வாசனை திரவியம் ,வாசனை எண்ணெய், வாசனை பவுடர் பயன்படுத்துவது அவசியம்