Coffee Side Effects:காஃபி பிரியரா? நீங்க கவனிக்க வேண்டிய சில விசயங்கள் இதோ!
தினசரி காலையில் அருந்தும் ஒரு கப் காஃபி, அந்த நாளை உற்சாகமானதாக தொடங்க உங்களுக்கு உதவலாம், உங்களது ஆற்றலை ஊக்குவிப்பதோடு, நாள் முழுவதிற்கும் உங்களை தயார்படுத்தும்.. நன்மைகள் பல இருந்தபோதிலும், காஃபியால் சில சாத்தியமான குறைபாடுகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
வெறும் வயிற்றில் காஃபி குடிப்பது விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், கார்டிசோல், ஒரு இயற்கையான ஆற்றலை அதிகரிக்கும் மன அழுத்த ஹார்மோன் ஆகும். அது தூங்கி எழுந்த முதல் இரண்டு மணிநேரங்களில் தான் உச்சத்தை அடைகிறது. எனவே, தூங்கி எழுந்த முதல் இரண்டு மணி நேரத்திற்கு, காஃபி பருகுவதை தவிர்ப்பது நல்லது.
நாளொன்றிற்கு 5 கோப்பைகளுக்கு மேல் காஃபி உட்கொள்வது என்பது, கவலை, மனச்சோர்வு, அமைதியின்மை, குமட்டல் போன்ற பல தேவையற்ற பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
அதிகப்படியான சர்க்கரையைச் சேர்ப்பது காஃபியின் நன்மைகளை எளிதில் தவிர்க்கலாம். உங்கள் காஃபி சர்க்கரையுடன் செறிவூட்டுவது கலோரி நிறைந்த பானமாக மாறும். அதன் மூலம் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளின் அபாயம் அதிகரிக்கலாம்.
காஃபி ஒரு டையூரிடிக் ஆக செயல்படுகிறதாம். அதிகப்படியாக காஃபி குடிப்பது, சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும், இது உடலில் நீர்ச்சத்து குறைவதற்கு வழிவகுக்கும். சமநிலையை பராமரிக்க, அதிகம் தண்ணிரை பருகுவது அவசியம்.காலை 9:30 மணி முதல் 11 மணி வரை தூங்கி எழுந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உங்கள் முதல் கப் காஃபியை அருந்துவது சிறந்தது. இரவு 7 மணிக்குப் பிறகு காஃபிய தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அது உங்கள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும்.