Butter Milk Or Curd : தயிரா? மோரா? எது நமக்கு செட் ஆகும்னு குழப்பமா இருக்கா? ..
சிலர் தயிரை சூடு என்றும் மோர் குளிர்ச்சி என்றும் கூறக் கேட்டிருப்போம், ஆனால் யார் எதை சாப்பிட வேண்டும் என்ற குழப்பமும் இருக்கும். எல்லாவற்றையும் இன்றோடு தீர்க்க தொடர்ந்து படிக்கவும்.
மோர் உடல் சூட்டை தணிக்கும், ஆனால் தயிரில் உள்ள மூலக்கூறுகள் உடைவதற்கு நீண்ட நேரம் ஆகும். அதனால் டயட்டில் இருப்பவர்கள், எடை குறைக்க நினைப்பவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கல்லீரல் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் தயிரை விட மோர் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
னால் தயிரிலிருந்து மோராக மாற்றப்படும் செயல்முறையின் போது அது குளிர்ச்சியடைகிறது. ஏனெனில் தயிரின் மூலக்கூறுகள் அடித்து உடைக்கப்பட்டு அதிலுள்ள கொழுப்புத்தன்மை பெரிதளவில் பிரித்து எடுக்கப்பட்டு வெண்ணெய் தயாரிக்கப்படும்.
தயிர் ஜீரணமாவதற்கு நீ்ண்ட நேரம் எடுக்கும் என்பதால் இரவு நேரங்களில தயிர் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் மோரில் அடர்த்தி குறைவு, நீர்த்தன்மை அதிகம் கொண்டது என்பதால் உடனடியாக ஜீரணமாகும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தயிருக்கு பதிலாக மோர் எடுத்துக் கொள்ளலாம். அப்போதும் மிக மிகக் குறைவான அளவு மட்டுமே தயிர் சேர்த்து அதில் நிறைய தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.
தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது தவறு. அந்த நேரத்தில் நம்முடைய ஜீரண மண்டலம் மிக மெதுவாக செயல்படும். அதனால் ஜீரணமாவது மேலும் கடினமாகும். அப்படியே தயிர் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு சரியான நேரம் மதிய வேளைதான்.