Cucumber Benefits :சரும பளபளப்பு.. உடல் ஆரோக்கியம்.. வெள்ளரிக்காயின் பயன்கள் என்ன?
வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மிக்கது. வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.
உடலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும், கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இரத்தத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு உடலுக்கு கொடுக்க கூடியது வெள்ளரிக்காய்.
தொப்பையை குறைக்க பல்வேறு வழிமுறைகளை முயற்சித்தவர்கள், தொப்பை குறைய தினமும் வெள்ளரிக்காய் சேர்ந்த நீர் குடிப்பதன் மூலம் பலன் பெறலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது.
வெள்ளரிக்காயை மசித்து கூழாக்கி ஃபேஸ் பேக் தயாரிக்கப்படுகிறது. இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கிறது. முகம், கண்கள் மற்றும் கழுத்துப்பகுதியில் வெள்ளரிக்காய் மசித்த விழுதை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் சருமத்துக்கு சிறந்த ஊட்டம் கிடைக்கும்.
வெள்ளரிக்காயை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் சரியாகும். இது பாக்டீரியாவிலிருந்து விடுபட உதவும்.
இது எளிதில் ஜீரணிக்க கூடியது. மேலும் செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க செய்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -