Cooking Tips : சப்பாத்தி காய்ந்து போய்விட்டதா? இப்படி செய்தால் மீண்டும் சாஃப்டாகும்!
அனுஷ் ச | 13 Aug 2024 01:08 PM (IST)
1
சப்பாத்தி காய்ந்து போய்விட்டால் அதன் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து மீண்டும் தோசை கல்லில் சூடாக்கினால் சாப்டாக மாறிவிடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தக்காளி சாதம் செய்யும் போது இஞ்சி, பச்சை மிளகாயை அப்படியே சேர்க்காமல் அரைத்து சேர்த்தால் நல்ல சுவையாக இருக்கும்.
3
காரக்குழம்பு செய்யும் போது புளிக்கு பதில் தக்காளி பழங்களை சேர்த்தால் காரக்குழம்பு ருசியாக இருக்கும்.
4
இட்லி பொடி அரைக்கும் போது எள்ளை வறுத்து சேர்த்தால் இட்லி பொடி சுவையாக இருக்கும்.
5
தக்காளி சாதம், பிரியாணி, புலாவ் ஆகியவற்றை குக்கரில் செய்யும் போது மூடியை திறக்கும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் சாதம் குழையாமல் வரும்.
6
கேசரி செய்யும் போது சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்தால் சுவை அற்புதமாக இருக்கும்.