Cooking Tips : பருப்பு சீக்கிரமாக வேக என்ன செய்யணும் தெரியுமா?
அனுஷ் ச | 11 May 2024 03:51 PM (IST)
1
கிழங்கு வகைகளை உப்பு கலந்த நீரில் ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து சமைத்தால் விரைவில் வெந்துவிடும்.
2
முட்டை ஓட்டின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால், அது சீக்கரம் கெடாமல் இருக்கும்.
3
கீரையில் ஓட்டை, பூச்சிகளின் முட்டை, மஞ்சள் நிற இலைகள் இருந்தால் அதை வாங்குவதை தவிர்க்கவும்.
4
இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவரில் கட்டி வைக்காமல் ஒரு கன்டைனரில் (Container) மூடி ஃபிரிட்ஜில் வைத்தால் வாரம் முழுவதும் கெடாமல் இருக்கும்.
5
சமையலுக்கு தேங்காய் உடைத்து பயன்படுத்தும் போது குடுமி இருக்கும் பாகத்தை முதலில் பயன்படுத்துங்கள். ஏனென்றால் அதுதான் முதலில் கெட்டு போகும்.
6
பருப்பு வேகவைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்தால் பருப்பு சீக்கிரமாக வெந்துவிடும்