Magnesium: தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்க உதவும் மெக்னீசியம் - இதோ டிப்ஸ்!
தூக்கமின்மை ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும். தூக்கமின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒன்று மெக்னீசியம் குறைபாடு ஆகும்.மெக்னீசியம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான அவசியமான ஒரு முக்கியமான மினெரல் ஆகும். இது வீக்கத்தை உருவாக்கும் காரணங்களை எதிர்த்து போராடுகிறது,
மெக்னீசியம் உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்துவதற்கான பொறுப்புடைய நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை செயல்படுத்துகிறது. மெக்னீசியம் நீங்கள் தூங்குவதற்கு மட்டுமல்ல, ஆழ்ந்த மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தையும் மேம்படுத்த உதவுகிறது. பலர் தங்கள் உணவில் போதுமான மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. மெக்னீசியம் குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளில் தசைப்பிடிப்பு, சோர்வு, எரிச்சல் மற்றும் தூங்குவதில் சிரமம் ஆகியவை அடங்கும்
கீரை, பச்சை காய்கறிகள், நட்ஸ் மற்றும் சீட்ஸ் உள்ளிட்டவைகளில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.
சூரியகாந்தி விதைகள் போன்றவை, பருப்பு வகைகள், பீன்ஸ் முழு தானியங்கள் குயினோவா மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவற்றில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.
இந்த உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது இயற்கையாகவே உங்கள் மெக்னீசியம் அளவை அதிகரிக்க உதவுகிறது. தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்ய உதவும்.