Cooking Tips: சொதப்பாமல் மீன் சமைக்கணுமா? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!
கண்கள் நன்கு பலபலவென இருக்கும் மீன்களையும், உறுதியான உடல் கொண்ட மீனையும் வாங்க வேண்டும். அப்போதுதான் உணவு மிகவும் சிறப்பாக வரும். துர்நாற்றம் வீசும் மீனைத் தவிர்க்க வேண்டும்.
பாத்திரம் நன்கு சூடான பின்னரே மீனை பாத்திரத்தில் போட வேண்டும். இல்லையென்றால் மீனின் அமைப்பு சிதைவதுடன் உண்பவர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
மீனை வறுக்கும் போது கடாயில் போட்ட பின்னர் மீனை உடனே திருப்பக்கூடாது. மீனின் ஒரு பகுதி வேகும் வரை நேரம் கொடுக்க வேண்டும். உடனே திருப்பிக்கொண்டு இருந்தால் மீனின் அமைப்பு சிதைந்து விடும்.
image 4
மீனை மிகவும் அதிக நேரம் வேக வைக்க கூடாது. ஒரு மீன் வேக 5 முதல் 7 நிமிடங்கள் போதும். அது மீனின் வகையைப் பொறுத்தது.
மீன் போன்ற மிகவும் பக்குவத்துடன் சமைக்கப்படவேண்டிய இறைச்சியை கொஞ்சம் கவனக்குறைவால் உணவின் ருசியையும் தன்மையையும் கெடுப்பது தான்.