Climate Chage: குளிர்காலத்தில் மழை...தொடரும் பருவநிலை மாற்றம்... காரணம் என்ன?

குளிர்காலம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்கிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
பருவநிலை மாற்றம் குறித்து, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் விளக்கமளிக்கிறார்

”தற்போது காலநிலையில் மாற்றம் நிகழ்ந்து உள்ளதை பார்க்க முடிகிறது”
கோடை காலத்தின் அளவு அதிகரித்துள்ளது, மழையின் தன்மையும் மாறியுள்ளது, குளிரின் தன்மையும் மாறியுள்ளது.
நிறுத்தி நிதானமாக பெய்ய வேண்டிய மழையானது, சில மணி நேரங்களிலே கொட்டி தீர்த்து விடுகிறது
சென்னையில் 212 நாட்கள் இருக்க கூடிய கோடை காலம் 252 நாட்களாக அதிகரித்து உள்ளது
இவையெல்லாம் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தியாவில் மட்டுமன்றி உலகளவிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை பார்க்க முடிகிறது.
முன்பு அடைந்த பாதிப்பை சரி செய்ய முடியாது, இனி வரக்கூடிய பாதிப்பை தடுக்க மட்டுமே முடியும்.
எனவே தடுக்க கூடிய வழிமுறைகளை நாம் கையாள வேண்டும்- வெற்றிச்செல்வன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -