Chilli Paneer Recipe : சில்லி பனீர் ரெசிப்பி.. ஈஸியா ப்ரோட்டீன் கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க..

பனீர்
எடை குறைப்புக்கு பனீர் நல்லதா? உடல் எடையை குறைக்க எத்தனிப்பவர்களுக்கு பனீர் சிறந்த தேர்வு. இதில் புரோட்டீன் நிறைந்துள்ளது.பொதுவாகவே புரத உணவுகளுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் குணம் உண்டு.
சில்லி பனீர் செய்ய, முதலில் பனீர் துண்டுகளை நெய்யில் வறுக்கவும். அதை ஒரு புறம் வைத்துவிட்டு பின்னர் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் துண்டுகளை சிறிது நெய்யில் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து அதனுடன் வதக்கவும்.
இதனுடன் அரை தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
நன்கு கலந்து வெங்காயம் மற்றும் குடைமிளகாய் மென்மையாகும் வரை வதக்கவும். பரிமாறும் முன் பனீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
தேவைப்படுபவர்கள் இதில் சாட் மசாலா அல்லது வேறு எந்த மசாலாவையோ சேர்க்கலாம்.
இதில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.