Chia Drink : உடலில் நச்சுத்தன்மை விலக தேவையான தண்ணீர் குடிக்கணும்.. கூடவே இந்த சியா ட்ரிங்க்கும் குடிங்க..
image 1
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் எடை குறைக்க விரைவான தீர்வு என எதுவும் இல்லை என்பது நீங்கள் அறிந்ததே. இது பொறுமை, கடின உழைப்பு மற்றும் கடுமையான உணவுப் பழக்கம் ஆகியவற்றை தீவிரமாகப் பின்பற்றும்போது மட்டுமே அடைய முடியும்.
உதாரணமாக, மஞ்சள்பொடி தேநீர், கற்றாழை நீர், எலுமிச்சை நீர் மற்றும் பல உடலுக்கான நல்ல டீடாக்ஸ் எனலாம். இந்த பானங்கள் அனைத்தும் உணவில் சேர்க்க ஏற்றது.
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது, இதன் மூலம் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
ஊட்டச்சத்து மிகுந்த சியா விதைத்தேநீர் தயாரிக்க, உங்களுக்கு தேவையானது ஒரு பேக் கிரீன் டீ, தேன் மற்றும் சியா விதைகள் ஆகியன... தேவைப்பட்டால் கடைசியாகக் கொஞ்சம் பிரஷ்ஷான புதினா இலைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்த நீரில் க்ரீன் டீ பேக்கை 5-6 நிமிடங்கள் வரை வைக்கவும்.பின்னர் அதனை இறக்கி தனியாக வைக்கவும்.
சியா விதைகளை சுமார் 15-20 நிமிடங்கள் தண்ணீரில் தனியே ஊற வைக்கவும். பிறகு, கிரீன் டீயில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
கலந்ததும் கிரீன் டீயில் ஊறவைத்த சியா விதைகளை சேர்த்து மீண்டும் கலக்கவும்.இதனை சூடாகவும் அருந்தலாம் அல்லது சிறிதுநேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்பானமாகவும் குடிக்கலாம்.