Chia Seeds: உடல் எடை குறைய சியா விதைகள் உதவுமா?
உலர் பழங்கள் தினம் எடுத்து கொள்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைகிறது. இந்த உலர் விதைகளில் ஒன்றான சியா விதைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
சியா விதைகளில், ஒமேகா 3 அமினோ அமிலங்கள், வைட்டமின் பி 1 (தையமின் ), வைட்டமின் பி 2 , மற்றும் வைட்டமின் பி 3 (நியாஸின்), துத்தநாகம், சத்துகள் நிறைந்து இருக்கிறது.
இதில் புரத சத்து நிறைந்து இருப்பதால், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தங்களின் உணவை இதை எடுத்துக்கொள்ளலாம் . இதனால், நீண்ட நேரம் பசி தாங்கும் மற்றும் மற்ற உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்காது.
பிரட் தயாரிக்க போது பிரட் கலவையுடன் சேர்த்து பேக் செய்து எடுத்து கொள்ளலாம்.
சியா விதைகளை 1/4 ஸ்பூன் எடுத்து 1/4 கப் நீரில் ஊற வைத்து, 20 - 30 நிமிடங்கள் கழித்து ஏதேனும் பழச்சாறுடன் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
சியா விதைகளை இரவு முழுவது பாலில் ஊறவைத்து காலை உணவில் மற்ற உலர் பழங்களுடன் சேர்த்து எடுத்து கொள்ளலாம்