Cauliflower 65: ஸ்நாக்ஸ் சாப்பிடனும் போல இருக்கா? சுவையான காலிஃப்ளவர் 65 ரெசிபி!
காலிஃப்ளவரை சுத்தம் செய்துவிட்டு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் காலிஃப்ளவர் , மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வர வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா, சோள மாவு, கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
பின் வேக வைத்த காலிஃப்ளவரை துண்டுகளாக்கி இந்த கலவையில் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
காலிஃப்ளவரில் மசாலா நன்கு இறங்க வேண்டும். 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும் காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலிப்ளவர் பக்கோடா தயிர் சாதத்துக்கு ஒரு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். தயிர் சாதத்துக்கு மேலும் சுவை கூட்ட காலி பிளவர் பக்கோடா உதவும். புலாவ் உடன் வைத்து சாப்பிடவும் காலிஃப்ளவர் 65 ஒரு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -