Keto Diet: மாதவிடாய் சுழற்சி பிரச்சனையை குணப்படுத்த கீட்டோ டயட் முறை உதவும் - ஆய்வில் தகவல்!

மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை இருப்பவர்கள் கீட்டோ டயட் முறையை பின்பற்றினால் அதிலிருந்து விடுபட முடியும் என்று ஒஹிகோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ketogenic என்றழைக்கப்படும் கீட்டோ டயட் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்டது. இந்த டயட் முறையில் உடலில் உள்ள கொழுப்பு சத்தி எரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படும்.

கீட்டோ டயட் உடல் எடையை குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. அப்படியே சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள் கீட்டோ உணமுறையை பின்பற்றினால் பிரச்னை குணமாக வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. PLoS ONE என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள் கீட்டோ டயட் பின்பற்றியதன் மூலம் அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியில் 34 வயதுக்குட்பட்ட 19 பேர் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு கீட்டோ முறை, கீட்டோ முறை அல்லாத உணவுகள் கொடுக்கப்பட்டது. அதில் 13ல் 11 பேருக்கு கீட்டோ உணவுகள் சாப்பிட்டதால் மாதவிடாய் சுழற்சி சீராகியுள்ளது. இது உடல் எடை குறைவதோடு தொடர்பு இல்லாதது எனவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீட்டோ உணவுமுறையை பின்பற்ற்வதால் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் சீராகியுள்ளது ஆயுவில் கண்டறியப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -