Beauty Tips : முகத்தை பிரகாசமாக வைக்க இனி பார்லர் செல்ல வேண்டாம் .. உங்களுக்கான டிப்ஸ் இதோ!
எலுமிச்சை சாறு, காபி பவுடர் அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், சிறிதளவு தேன் சேர்த்து கழுத்து பகுதியில் தேய்த்து வந்தால் கருமை நிறம் குறையலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆரஞ்சு சாறு, பச்சை பயிர் மாவு 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவினால் முகத்தை பளபளப்பாக வைக்கலாம்.
தண்ணீரில் ஊற வைத்த பாதம் 10 , காய்ச்சாத பால் 1 டம்ளர், கற்றாழை சாறு சேர்த்து மிக்சியில் அரைத்து இரவில் தூங்கும் முன் முகத்தை கழுவினால் சருமத்தை பிரகாசமாக வைக்கலாம்.
அரிசி மாவு 2 டீஸ்பூன், தேங்காய் பால் அரை கப் இரண்டையும் மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவினால் முகத்தை பிரகாசிக்க வைக்கலாம்.
முதலில் தக்காளியை பாதியாக நறுக்கி சர்க்கரையில் தேய்த்து முகத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். அடுத்தது உருளைக்கிழங்கை பாதியாக நறுக்கி முகத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும் இப்படி செய்தால் முகப்பருக்கள் குறையலாம்.
கடலை மாவு, தயிர், காபி பவுடர், தண்ணீர் சேர்த்து பேஸ்டாக மிக்ஸ் செய்து முகத்தை கழுவினால் முகத்தை பொலிவாக வைக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -