Tender coconut milkshake recipe : குளு குளு வெண்பனி போல.. வெயிலை சமாளிக்க ஜிலு ஜிலு இளநீர் மில்க் ஷேக்!
கோடை கால வெப்பத்தை சமாளிக்க முடியவில்லையா? குழந்தைகள் மில்க் ஷேக் கேட்கிறார்களா? இளநீர் குடித்து குடித்து போர் அடித்து விட்டதா? இந்த அனைத்து கேள்விக்கும் ஓரே பதில், இளநீர் மில்க் ஷேக். சிம்பில் மற்றும் சத்தான இந்த இளநீர் மில்க் ஷேக்கை வீட்டில் செய்து பருகி மகிழுங்கள்!
தேவையான பொருட்கள் : 150 மில்லி லிட்டர் இளநீர், 150 கிராம் இளநீர் வழுக்கை, 4 ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்க்ரீம், 100 மில்லி லிட்டர் பால், ஐஸ் க்யூப்ஸ்
செய்முறை : இளநீர், இளநீர் வழுக்கை, பால், வெண்ணிலா ஐஸ்க்ரீம், ஐஸ் க்யூப்ஸ் அனைத்தையும் ப்ளெண்டர் அல்லது மிக்சியில் போட்டு அடித்து கொள்ளவும்.
அனைத்தையும் நன்றாக அடித்த பிறகு கடைசியில் சிறிதளவு இளநீர் வழுக்கையை சேர்த்து கொள்ளவும்.
அதனை ஒரு கண்ணாடி ஜார் அல்லது கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே கொஞ்சம் ஐஸ்க்ரீம் வைத்தால் சூப்பரான இளநீர் மில்க் ஷேக் ரெடி.
குறிப்பு : ஃப்ரெஷ் ஆன இளநீர் பயன்படுத்துவது நல்லது. இளநீர் மில்க் ஷேக் தயாரான சிறிது நேரத்தில் பருகிவிட வேண்டும்.