Crispy Dosa : தோசை மாவை எப்படி ரெடி பண்ணா, மொறு மொறு தோசையை ஜமாய்க்கலாம்.. டிப்ஸ் இங்க இருக்கு.
ஜான்சி ராணி | 16 Dec 2022 07:37 PM (IST)
1
எந்நாளும் எந்நேரத்துக்கும் ஒருவர் ‘நோ’ சொல்லாமல் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தோசை.
2
சரிவர தோசை ஊற்ற வராது... எளிதாக முறுவலாக தோசை ஊற்ற சில டிப்ஸ்கள் இதோ...
3
மிருதுவான தோசைகளை உருவாக்க தோசை கல்லை மிதமான தீயில் சூடாக்கவும்.
4
அது போதுமான அளவு சூடாக இருக்கும்போது, சில துளிகள் எண்ணெய் சேர்த்து வெங்காயம் கொண்டு கல்லைத் தேய்க்கவும்.
5
தோசைக் கடாயின் மையத்தில், ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றவும்.பிறகு அதனை கல்லில் நன்கு வட்டமாகத் தேய்க்கவும்.
6
வட்டமான தோசையைச் சுற்றி சில துளிகள் எண்ணெயை ஊற்றவும், தோசையின் அடிப்பகுதி பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
7
அதை கவனமாக கல்லில் இருந்து எடுக்கவும் பிறகு அதனை இரண்டாக மடித்து தட்டில் வைக்கவும்
8
இதனை தேங்காய் சட்னி, சட்னி பொடி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்