Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
World Food Safety Day 2023 : உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று..இந்த நாள் பற்றிய தகவல்களை தெரிஞ்சுக்கோங்க!
உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவினால் ஏற்படும் அபாயங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2018 இல் நிறுவப்பட்டது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக உணவுப் பாதுகாப்பு தினத்தின் முதன்மைக் குறிக்கோள், உற்பத்தி முதல் நுகர்வு வரை உணவுச் சங்கிலி முழுவதும் பாதுகாப்பான உணவு நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்துவதாகும்.
நாம் உண்ணும் உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதிசெய்து, நடவடிக்கை எடுக்க அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் தனிநபர்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 600 மில்லியன் மக்கள் உள்ள`1 உலகில் 10 பேரில் 1 பேர் நோய்வாய்ப்படுகிறார்கள்.மற்றும் 420,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் அசுத்தமான உணவை சாப்பிட்டு உயிரிழக்கின்றனர்.
இந்த நாள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -