Cardamom Benefits : தினமும் 3 ஏலக்காய் போதும்....இவ்வளவு பயன் இருக்கா...முழு விவரம்...!
நம்முடைய சமையல் அறையில் சைவம், அசைவம் எந்த உணவாக இருந்தாலும் வாசனைக்காகவும், சுவைக்காகவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமசாலா மற்றும் வாசனைப்பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏலக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
ஏலக்காயைத் தினமும் நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, பருவகாலத்தின் போது ஏற்படும் சளி , இருமல் குணமாக்குவதோடு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.
ஏலக்காய் சாப்பிட்டால், வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், விக்கல், தோல் தொற்று நோய் போன்றவற்றை போக்குகிறது.
ஏலக்காய் டீ போன்று செய்து பருகும் போது சளி, இருமல், காய்ச்சலுக்குத் தீர்வாக அமைகிறது.
இதோடு வாயுத் தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்னைகளை சரி செய்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -