Black Coffee: பிளாக் காபி பிரியரா நீங்கள்..! என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா?
சோர்வாக உணரும்போதோ, மன அழுத்தம் ஏற்படும்போதோ, வேலைகள் செய்து களைத்து போகும்போதோ, காபி குடித்து இளைப்பாறுவது உலக வழக்கம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதிலும் உடல் எடையை குறைப்பவர்கள், டயட்டில் இருப்பவர்கள் பால் சேர்க்காமல் அருந்த விரும்புவார்கள். பலருக்கு அது மனதிற்கு இதமாகவும் அமையும்.
பிளாக் காபி குடிப்பது உங்கள் இயற்கையான தூக்கத்தை பாதிக்கலாம். நல்ல தூக்கத்திற்கு காரணமான அடினோசின் ஏற்பிகளை காஃபின் தடுக்கிறது
காஃபினின் சில தாதுக்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, கால்சியம் மற்றும் ரெட்டினோல் உறிஞ்சுதலைத் தடுக்கலாம்.
40 வயதுக்கு மேற்பட்ட பாலூட்டும் பெண்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு காஃபின் நல்லதல்ல என்பது கூறப்படுகிறது.
உடல் அதிக ஊட்டச்சத்துக்களை ஏற்காமல் வெளியேற்ற செய்துவிடும். கூடுதலாக, அமிலத்தன்மை, பசியின்மை, நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -