Brown Rice Benefits : உடலுக்கு நன்மை தரும் பழுப்பு அரிசி...பலன்கள் என்ன?
அரிசிதான் இந்திய மக்களுக்குப் பிரதான உணவு என்றாலும் பொதுவாகவே வெள்ளை அரிசியில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதுவே பழுப்பு அரிசி அதற்கு நேர்மறையாகச் செயலாற்றுகிறது; அதாவது, மாங்கனீசு, கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளிட்ட பல்வேறு நன்மை பயக்கும் பண்புகளைக் பழுப்பு அரிசி கொண்டுள்ளது.
பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.
நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பலவற்றால் செறிவூட்டப்பட்ட பழுப்பு அரிசி எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்குச் சிறந்ததாக கருதப்படுகிறது.
தினமும் ஒரு கப் பழுப்பு அரிசியை உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை 60 சதவீதம் வரை கணிசமாகக் குறைக்கிறது.
பழுப்பு அரிசியானது முழு தானியமாக கருதப்படுகிறது.அதனால் இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -