Bottle Gourd : உடல் எடை குறையுமா? சுரைக்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
அபரிதமான ஆரோக்கிய நலன்களை கொண்ட காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. இது நீர்ச்சத்து மிகுந்த காய் வகை என்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுரைக்காயில் கலோரி மிகக் குறைவு .வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
சுரைக்காய் ஜூஸ் கறுப்பான மற்றும் பளபளப்பான கூந்தலை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க உதவும் எனக்கூறப்படுகிறது.
சுரைக்காய் மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது என்றும் மன அழுத்தத்தைத் தடுக்கும் காரணிகள் இதில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுரைக்காய் ஜூஸ் குடிப்பது தாகத்தைத் தணிக்கும் மற்றும் உடலை குளிர்விக்க உதவும், அதே நேரத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -