Indigestion : செரிமான பிரச்சனை தொடர்ந்து தொல்லை கொடுக்குதா? ஓமத்தை எப்படி பயன்படுத்தலாம்?
இரைப்பை பிரச்சினை, வயிற்று வலி, குடல் இரைச்சல், பல் நோய் என பலவற்றுக்கு அருமருந்தாக இந்த ஓமம் செயல்படுகிறது.
ஆதி காலம் தொட்டு நமது வீடுகளில் சிறந்த மருந்து பொருளாக பயன்படுத்தப்பட்டு வருவது தான் இந்த ஓமம். இது மசாலா வகைகளில் சேர்க்கப்பட்டாலும் பொதுவாக வீடுகளில் இன்றளவும் இது ஒரு மருந்து பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது.
ஓமத் தண்ணீர் வயிற்றில் ஏற்படும் அனைத்து வலி உபாதைகளுக்கும் அரு மருந்தாக செயல்படுகிறது.
சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகவில்லை என்றால் இந்த எலுமிச்சை சாறு மற்றும் ஓமம் கலந்த பானத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது எளிதாக செரிமானம் அடைகிறது.
ஒரு ஸ்பூன் ஓமத்தூள் மற்றும் எலுமிச்சை சாறை ஒன்றாக கலந்து தேவையானால் நீர் சேர்த்துக் கொள்ளலாம் .அதில் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து கலந்து குடிக்கவும்.
மேலும், ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை சேர்த்து தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் தண்ணீர் கொதித்ததும் சிறிது உப்பு சேர்த்து வடிகட்டி அருந்தவும்.