Arya : விருமனையும் பருத்திவீரனையும் கலந்தடித்த முத்தையா படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!
சுபா துரை | 15 May 2023 11:10 AM (IST)
1
விருமன் படத்திற்கு பிறகு இயக்குநர் முத்தையா இயக்கும் திரைப்படம் ‘காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’.
2
இந்த படத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, பாக்ய ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
3
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
4
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது.
5
இந்நிலையில் இந்தப் படம் வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6
வழக்கமான முத்தையா திரைப்படம் போலவே இந்தப் படமும் செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.