HBD Yogi Babu : நகைச்சுவை நடிகர் டூ ஹீரோ.. யோகி பாபுவின் பிறந்தநாள் இன்று!
பிரபல நிகழ்ச்சியான லொல்லு சபாவில் துணை இயக்குநராக தன் பயணத்தை தொடங்கிய பாபுவிற்கு, அமீரின் யோகி படம்தான் யோகிபாபு என்ற அடையாளத்தை கொடுத்தது
பையா, கலகலப்பு போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த யோகி பாபுவிற்கு பட்டத்து யானை படத்தில் சின்ன காமெடி சீனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
யாமிருக்க பயமேன் படத்தில் வரும் “பண்ணி மூஞ்சி வாயன்” என்ற வசனம் மூலம் பிரபலமானார். ஆரம்ப காலக்கட்டத்தில் உருவ கேலிக்கு உள்ளானாலும், அதையே அவருக்கான வளர்ச்சிகாகவும் வாய்ப்பிற்காகவும் பயன்படுத்தி கொண்டார்.
அதன் பின் காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் என ஒவ்வொரு வருடத்திலும் 10 படங்களுக்கு மேல் நடித்து வந்தார்.
சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி, காமெடியனாக மாறி, படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
தர்மபிரபு, கூர்கா, மண்டேலா, பொம்மை நாயகி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களில் லீட் ரோலில் நடித்து இன்னும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.