‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்..’இன்றளவும் காலம் கடந்து நிற்கும் முத்துக்குமாரின் வரிகள்!
அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கான பாடல் வரிகள் 'உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே'
வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்வுக்கும் ஏற்ற நா.முத்துக்குமாரின் வரிகள் 'ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது'
தவறுக்காக மனிதன் வருந்தும்போது அல்லது மன்னிப்பு கேட்டபிறகு மன்னிக்கப்படுமா? என்பதை விளக்கும் வரிகள் ’தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்’
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நா முத்துக்குமாரை இப்படிப்பட்ட வரிகளை எழுத வைத்தது எது? அவர் ஒரு சிறந்த மகனா அல்லது தந்தையா? ’தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே’
தங்க மீன்கள் படத்தில் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வரிகள் 'அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி'
எந்திரன் 2.0 படத்தில் இயற்கை ஓடு இணைந்து வாழ்வதை மனிதன் மறந்துவிட்டான் என்பதை குறிக்கும் வரிகள் ’மொழி இல்லை மதம் இல்லை யாதும் ஊரே என்கிறாய் புல் பூண்டு அது கூட சொந்தம் என்றே சொல்கிறாய் காற்றோடு விளையாட ஊஞ்சல் எங்கே செய்கிறாய் கடன் வாங்கி சிரிக்கின்ற மானுடன் நெஞ்சை கொய்கிறாய்’