Squash Game : சென்னையில் நடக்கும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்....தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனையம் , உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் இப்போட்டியில் இந்தியா, மலேசியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகள் இதில் பங்கேற்கிறது.
இதனை தொடங்கி வைத்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உலக கோப்பையையும் அறிமுகம் செய்துவைத்தார்.
இதில் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு தலைவர் ஜெனா வுல்ட்ரிட்ஜ், இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு தலைவர் அனில் வாத்வா, 8 அணிகளின் கேப்டன் உள்பட பலர் தொடக்கவிழாவில் பங்கேற்றனர்.
இந்த போட்டி ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் காலை 10:30 மணிக்கு தொடங்கி இரவு 8:30 மணி வரை நடைபெறுகிறது.
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி சென்னையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.