WhatsApp New Update : வாட்சப் குரூப் உருவாகுவதில் இனி சிக்கல் இல்லை.. மெட்டா அறிமுகப்படுத்த உள்ள புதிய அப்டேட் என்னவாக இருக்கும்?
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது.
தற்போது, வாட்ஸ் அப்பில் பெயர் வைக்காமலே குரூப் உருவாக்குவது போன்று புதிய வசதியை மெட்டா விரைவில் கொண்டு வர உள்ளது. முன்னதாக வாட்ஸ் ஆப்பில் குரூப் உருவாக்குவதற்கு பெயர் வைப்பது கட்டாயமாக இருந்தது.
அதன்படி குரூப் கிரியேட் செய்யும் நபரின் எண், உங்களது மொபைலில் என்ன பெயரை வைத்து பதிவு செய்தீர்களோ அது தான் குரூப்பின் பெயராக உங்களது மொபைலில் தோன்றும். ஒரு வேலை அவரின் பெயரை உங்களது மொபைலில் பதியவில்லை என்றால் அந்த குரூபின் பெயர் அவரது நம்பராக மாறும்.
இதனை பயனர்களுக்கு எளிதாக்கும் வகையில் மெட்டா புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த அம்சம் தற்போது சோதனையில் இருப்பதாகவும், விரைவில் அனைத்து பயனாளர்களுக்கு கிடைக்கும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.
முன்னதாக பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போன் நம்பர் பிரைவசி என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது