Virumandi Special Screening : இது நவம்பர் மாதம் அல்ல..நம்மவர் மாதம்..கமல் பிறந்தநாளுக்கு திரையிடப்படும் விருமாண்டி படம்!
கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்த விருமாண்டி படம் 2004 ஆம் ஆண்டின் பொங்கலுக்கு ரிலீஸானது. ஆண்டுகள் பல கடந்தாலும், இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கல்ட்-கிளாசிக் படமாக இது அமைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரே சம்பவத்தை வெவ்வேறு கதாபாத்திரங்கள் விவரிக்க திரைக்கதை விரியும், ராஷாமோன் எஃபெக்டில் படம் உருவாகி இருக்கும். தமிழில் சிவாஜி நடிப்பில் வெளியான “அந்த நாள்”படத்திற்கு பின் நான் லீனியர் பாணியில் உருவான படமே விருமாண்டி.
அன்னலட்சுமியாக அபிராமி, கொத்தாளத்தேவராக வரும் பசுபதி, ஏஞ்சலா காத்தமுத்துவாக வரும் ரோஹினி, நல்லமநாயக்கர் நெப்போலியன், பேய்க்காமனாக வரும் சண்முகராஜன், ஜெயிலர் ஜெயந்தாக வரும் நாசர் என அனைவரும் நடித்து அசத்தியிருப்பார்.
படக்கதைக்கு ஏற்ப பாடல்களையும் முத்து முத்தாக இசையமைத்திருப்பார் இளையராஜா. உன்னவிட, சண்டியரே, கொம்புல பூவ சுத்தி ஆகிய பாடல்கள் இன்றும் பலரது ப்ளே லிஸ்டை ஆண்டு வருகிறது.
19 ஆண்டுகளை கடந்த இப்படம் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி நவம்பர் 7ஆம் தேதி வடபழனி கமலா திரையரங்கில் பிரத்யேகமாக மாலை 6 மணிக்கு திரையிடப்பட உள்ளது.
இந்த தகவல் வெளியான பின் சினிமா பிரியர்களும் கமல் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -