Indian 2 : ‘இந்தியன் இஸ் பேக்..’ எப்படி இருக்கு சேனாபதியின் ரீ என்ட்ரி? குட்டி விமர்சனம் இங்கே!
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக, அதன் இரண்டாம் பாகமான இந்தியன் 2 அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
இதில், கமல்ஹாசனுடன் பிரியா பவனி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் பிரித் சிங், விவேக், நெடுமுடி வேணு, சமுத்திரகனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இண்ட்ரோ வீடியோ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேற்று வெளியானது.
இந்த காலத்தில் லஞ்சம், ஊழல் பிரச்சினை தலைவிரித்து ஆடுவதால், அனைவரும் கம் பேக் இந்தியன் என்று ட்ரெண்ட செய்ய அதை தடுத்து நிறுத்த “இண்டியன் இஸ் பேக்” என்று வசனம் பேசி கம்-பேக் கொடுக்கிறார் சேனாபதி வீரசேகரன்.
முதல் பாகத்தில் இடம் பெற்று இருக்கும் போன் பேசும் காட்சியும், நிழல்கள் ரவியுடன் பேசும் காட்சியும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் சமீபத்தில் நடந்த விஷயங்களை நுட்பமாக விவரித்துள்ளது. 2000 ரூபாய் பணம் ஒழிப்பு, விஜய் மல்லையா ரெஃபரன்ஸ், கொரோனா காலத்தில் மெழுகு ஏற்றி பாத்திரங்களை பயன்படுத்தி சத்தம் எழுப்பியது, எலான் மஸ்கின் ப்ளூ டிக் விவகாரம், ஆதார் கார்ட் என அனைத்தும் மறைமுகமாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
என்னதான் இருந்தாலும் இந்த வீடியோ பார்பதற்கு விளம்பர படம் போலவே உள்ளது. அத்துடன் இந்தியன் தாத்தா முகத்தின் சி.ஜி கொஞ்சம் சுமார்தான்.அனிருத்தின் இசை இப்படத்திற்கு பொருத்தமாக இல்லை என்றும் மக்கள் பல தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.